Valli Valli Ena Vanthan Song Lyrics in Tamil

Monday, 3 June 2013
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு தினமும் சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்

சொல்லால் சொல்லாதது
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது
கைகள் தொட இந்நாள் ஒன்றானது
 வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்த்தேன் இன்பத்தேன் கொட்டுமா
இந்தப்பூ சின்னப்பூ கன்னிப்போகும்கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னம்மா
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்

செந்தழ் புல்லாங்குழல் வாண்டியதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் கங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையின்றி வேறு இங்கு யாரும் இல்லையே
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்

Copyright @ 2014 Tamil Songs Lyrics· All Rights Reserved
Blogger Templates Wallpapers Wifi Password Hacking